தலைப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற காப்பியங்களை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறது.
இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் சேர்ந்து பேசி கற்பனை கலந்து எழுதிய இரட்டை காப்பியங்கள் இவை என்பது ஆசிரியர் வாதம். கண்ணகி, கோவலன், மாதவி, கவுந்திஅடிகள், வசந்தமாலை, சித்திராபதி, உதயகுமாரன், மணிமேகலை என்று இரண்டு இலக்கியங்களிலும் உள்ள பாத்திரப் படைப்புகளை பார்க்கும் பார்வை வேறு விதத்தில் உள்ளது.
முத்துக்களை காட்டிலும் மாணிக்கம் விலை உயர்ந்தது. கண்ணகியின் சிலம்பில் இருந்தது மாணிக்கங்கள் என்றால், மன்னனை காட்டிலும் செல்வம் வளம் படைத்தவர்கள் தனவணிகர் என்பதாக முடிவு செய்துள்ளார்.
கணவன் மனைவி பிரிவு துயரை காட்டிலும் அதை காண்பவர் துயரம் பெரிது என்பதையும் நோயும் நொடிவும் யாருக்கும் சாத்தியமே என்பதையும் சொல்லுகிறார். சத்தான வரிகள்.
– சீத்தலைச் சாத்தன்