வெற்றியையும், கையையும் முதன்மைப் படுத்தியுள்ள நுால். இதை படைத்தவருக்குக் கைத்திறனாக இல்லை. இரண்டாம் உலகப் போரில் இரண்டு கைகளையும் இழந்து மனவலியில் தவிக்கிறார். அதன் வெளிப்பாடு வெற்றி மனிதனாக மாற்றியுள்ளது. இது, ‘விக்டரி இன் மை ஹாண்ட்ஸ்’ என்னும் ஆங்கில நுாலின் தமிழாக்கம்.
திரையரங்கத்தில் கைகுலுக்குவதற்காக அருகிலிருந்த பெண் கையை நீட்டுகிறாள். இவரது இரும்புக் கையைப் பார்த்து பயந்து ஓடுகிறாள். இதைப் போன்ற நிகழ்வுகள் அதிகம். உள்ளம் சோர்வடையாமல் தொடர்ந்து உணர்வலைகள் எழும்பிக்கொண்டே இருக்கின்றன.
கைகளை பயன்படுத்தாமலே வெற்றி பெற பல தொழில்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தார். அரசியல், சமூக சேவை என எத்தனையோ துறைகளில் ஈடுபடலாம் என்று உணர்ந்தார். இரண்டாம் உலகப் போரில் உடல் பாகங்களை இழந்தவர்கள் தொடர்பாக எடுக்கவிருக்கும் படத்திற்கு நடிகராகத் தேர்வு செய்யப்படுகிறார். வெற்றிக்கு வழி உள்ளத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்