சுய முன்னேற்றத்திற்கான வழிகளைக் காட்டும் நுால். பயிற்சி, விடாமுயற்சி, ஒழுக்கம், முழுத் தகுதி, முதலீடு, அனுபவம், கடின உழைப்பு, நேர்மை, பொறுமை இவையே வெற்றிக்கான படிகள் என்கிறார்.
ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு தலைப்பும், அதில் ஊக்கம் தரும் செய்திகளும், பாடல்களும், உதாரணங்களும், தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. பாட்டுகளும் வரிசையாகப் பவனி வருகின்றன. எதிர்மறை மனிதர் முரண்பாடானவர்; நேர்மறை மனிதர் பொறுமையானவர்; வல் மறை மனிதர் சுயநலமானவர்; வல்லவனுக்கு வல்ல மனிதர்கள் எதையும் விலை கொடுத்து சாதிப்பவர்கள் என்று பிரிக்கின்றார்.
மனிதர்களில் புனிதர்கள் வரிசையில், காந்தி, நேதாஜி, நேரு, காமராசர், தெரசா, மைக்கேல் ஜாக்சன், ஆம்ஸ்ட்ராங், ஷேக்ஸ்பியர் ஆகிய தலைவர்களின் வெற்றி மிகு வரலாற்றை எழுதுகிறார். சுய முன்னேற்றக் குறிப்பு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்