உணர்ச்சிபூர்வமான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.‘நான் உன்னோட புள்ளம்மா. இன்னொரு வீட்டுக்கு போய் விருந்து சாப்பிடுவதை விட, நீ தரும் பொட்டுக்கடலையே எனக்கு போதும்மா...’ என்கிற பிள்ளையைப் பெற்ற ஏழைத்தாயை மையமாகக் கொண்டது ஒரு கதை.
விதவையின் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறது ஒரு கதை. அதை விட கட்டிக் கொடுத்த பெண்ணை ஒட்டிக் கொண்டே இருக்கக் கூடாது என்ற நீதியை ஒன்று போதிக்கிறது. நோயாளி ஆக படுத்து அனுபவிக்கும் துன்பத்தை விட, உடன் துணைக்கு இருப்பவர் நிலை தான் மிகவும் அவலமானது என்று நினைக்கும் ஒரு பெண்ணின் மனநிலை நிதர்சனமாக உள்ளது. சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கொண்ட நுால்.
– சீத்தலைச் சாத்தன்