சிறுவர் சொல் விளையாட்டு என்றாலும் பெரியவர்களுக்கும் அறிவு விருத்தி தரும் புத்தகம். பொழுதை சிறப்பாக போக்கவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும், தமிழின் அருமையை போற்றவும் உதவும்.
மொத்தம் 100 புதிர்கள் உள்ளன. பக்கத்திற்கு ஒன்றாக படத்துடன் சொல்லுக்கு பக்கத்திலேயே பொருளும் சொல்லியிருப்பது விளையாட்டை எளிதாக்குகிறது.
உதாரணத்திற்கு புறம்போக்கு என்ற சொல். இதன் அர்த்தம் பயன்படாத நிலம் மற்றும் பயனற்றவன். இந்த ஒற்றைச் சொல்லை இரண்டாக பிரித்தால் புறம் ஒரு சொல். போக்கு மறுசொல். புறம் என்பதின் அர்த்தம் வெளியிடம். போக்கு என்பதன் அர்த்தம் போக்கு காட்டுதல் மற்றும் நீக்குதல். இது மாதிரி புத்தியை கூர் தீட்ட உதவும் புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்