திவ்ய தேசங்கள் 108 என்று சொல்வர். இதில், 106 என்று சொல்வதற்கான விடை புத்தகத்தின் கடைசியில் உள்ளது. தமிழகத்தில் மட்டுமே 84 திவ்ய தேசங்கள். வழிகாட்டியாக பக்கத்து பெரிய நகரத்தில் இருந்து எத்தனை கிலோமீட்டர் என்று சொல்லியிருக்கிறார். முதல் திவ்யதேசம் ஸ்ரீரங்கம். 106வது திவ்யதேசம் திருப்பதி.
ஐந்தாவது திவ்யதேசம் அன்பிலில் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருப்பதையும், கும்பகோணத்தில் மகாமகம் எப்பொழுது வரும் என்பதையும், திருக்கண்ணங்குடி ஷேத்திரத்தில் விழாக்காலங்களில் பெருமாள் திருநீறு அணிந்து காட்சி தருவதையும் விவரிக்கிறார்.
புத்தகத்தைப் படித்தாலே திவ்ய தேசங்களை தரிசித்த திருப்தி கிடைக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்