நோய்நொடியின்றி வாழும் நலவாழ்வு பற்றி வலியுறுத்தும் நுால். தமிழகத்தில், ’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பொன்மொழி காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. இதற்கான தெளிவை, வள்ளுவர் தொடங்கி, திருமூலர், வள்ளலார் என ஞானிகளும், சித்தர்களும் காலந்தோறும் உணர்த்தி வந்துள்ளனர். இந்த நுால் அவற்றை வலியுறுத்தியுள்ளது.
மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது மட்டும் மருத்துவம் என பொருள் கொள்ளாமல், பாரம்பரிய முறையிலான வாழ்வை கடைப்பிடித்து நீண்ட நாள் வாழும் வழிமுறையை எடுத்துக்கூறுகிறது.
இது தொடர்பான கருத்துக்களை, நான்கு பெரும்பிரிவுகளில் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக உணவே மருந்து என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவுக் கூறுகளை விளக்கமாக முன் வைக்கும் நுால்.
– முனைவர் ரா.பன்னிருகை வடிவேலன்