எளிய சொற்களைக் கொண்டு வார்த்திருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். புரிந்து வாசிக்கக் கூடிய வகையில் உள்ளது. வாழப் போகும் வாழ்க்கையையும், வாழ்ந்து நொந்து கெட்ட வாழ்க்கையையும், வறுமையிலும் வசதியாய் வாழும் தற்கால வாழ்க்கையையும் மிக அழகாக படம் பிடிக்கிறது. வலியை கவிதையாக கொண்டு வாழ்க்கை ரகசியத்தை வெளிப்படுத்துகிறது.
முதலில் கதைகளைச் சொல்லி, பின்னர் கவிதையாய் வருவது தனித்துவம். தேடிய வாழ்க்கை கிடைக்காமல், கிடைத்ததைக் கொண்டு, ‘தேடினேன் கிடைத்தது; ஆனால் தேடியது கிடைக்கவில்லை’ என்று சில கசப்பு, பசுமைகளை சுமந்து கரையேறுகிறது இந்த நுால்.
– வி.விஷ்வா