திரைப்பட பாணியில் திகில் திருப்பங்களுடன், விறுவிறு நடையில் அமைந்துள்ள வித்தியாசமான நாவல். அண்ணன், தம்பி என்றாலும் வளரும் போது பங்காளிகளாவதை மெய்ப்பிப்பதாக உள்ளது.
தம்பியும் அவரது மனைவியும் இறந்துவிட, அவர்களின் ஒரே வாரிசை அண்ணனும் அவர் மனைவியும் கொடுமைப்படுத்துவதை உள்ளம் உருகும் வண்ணம் விவரிக்கிறது. விவசாய குடும்பங்களில் இது போன்ற சம்பவங்கள் சகஜமாய் நிகழ்வதை எடுத்துக்காட்டுகிறது.
நாட்டு நடப்பை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. மூன்றாம் பாலினம் என்பது சாபமோ, பாவமோ அல்ல; ஆணுக்கும், பெண்ணுக்கும் இணையான சம உரிமை நிலை என்பதை கதாபாத்திரங்கள் வழியாக உரைக்கிறது. சமுதாயத்திற்கு படிப்பினை ஊட்டும் நாவல்.
– டாக்டர் கார்முகிலோன்