ராமாயணத்தில், 74 படலங்களை உள்ளடக்கிய நுால். பக்திச் சுவையும், காவியச் சுவையும் குன்றாமல் உரை நடையில் பேசுகிறது. கம்பர் பாடிய ஆறு காண்டங்களோடு, ஒட்டக்கூத்தர் பாடிய உத்தர காண்டமும் இடம் பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் சிறந்த பொருண்மையுடன் அமைந்துள்ளது. சொல்லழகும், பொருளழகும் பொதிந்த பாடல்களை சில இடங்களில் பதிவிட்டுள்ளது. பொருத்தமான இடங்களில் திருக்குறள் அறநெறிச் சாரம் முதலிய நுால்களில் இருந்து எடுத்துக்காட்டு தந்து விளக்கியிருப்பது அருமை.
கம்ப ராமாயணத்தை முழுதும் கற்க நேரம் இல்லாதவர்கள், இதை பயிலலாம். கதைப் போக்கிற்கு இடையூறு வராமல் உரைநடை வகுக்கப்பட்டுள்ளது. இதை படிப்பதால் ராம காதையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
சொற்பொழிவாளர்கள், மாணவர்களுக்குப் பெரிதும் பயன் தரும். ‘ராம’ என்று சொன்னால் அனைத்துப் பாவங்களும் நீங்கும். துன்பம் நீங்கி இன்பம் பெருக படிக்க வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்