முக கவசத்தின் ஊடே, முகம் தெரியாத ஒரு பெண்ணை நினைத்து அத்தியாயம் அத்தியாயமாய் கதை செல்கிறது. குடும்பக் கதையை விறுவிறுப்பாகச் சொல்லும் நாவல். காதலுடன் கொஞ்சம் திகிலும் துாவிச் சமைத்துள்ளதால், ஆர்வமாக கதைக்குள் இழுத்துக் கொண்டே செல்கிறது.
புத்தகத்தின் இரண்டாவதாக, ‘என்னைக் காணவில்லையே நேற்றோடு’ என்ற நாவல் உள்ளது. ஒன்று வாங்கினால் இன்னொன்று என்பது போல் ஒரு புத்தகம், இரண்டு நாவலாய் குளிர்விக்கிறது. ஒன்றை படித்து முடித்துவிட்டு அசை போட நேரம் கொடுக்காமல் தொடர்ந்து படிக்க வைக்கிறது. சிவசக்தி, கீர்த்தனா, உதய், குறிஞ்சி என்ற பெயர்களுடன் மொட்டை மாடியும் ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. இதுவும் இன்னொரு காதல் கதை தான்.
மீண்டும் மீண்டும் நிகழ்ச்சிகளின் சுழலில் சிக்க வைக்கும் இந்த இரண்டு காதல் கதைகளுமே வேறுபட்டவை. வேகமாகப் படித்து முடிக்கத்தக்க வகையில் விறுவிறுப்பு நிறைந்துள்ளன.
– முகிலை ராசபாண்டியன்