தமிழக அணைக்கட்டுகள் பற்றி விரிவான தகவல்களை கொண்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். முக்கிய நீராதாரங்களை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் உள்ள அணைகள் பற்றி, 26 கட்டுரைகள் உள்ளன. முதலில், ‘இந்தியாவில் முக்கிய அணைக்கட்டுகள்’ என்ற தலைப்பில் துவங்குகிறது.
இந்தியாவில் நீர் மேலாண்மை பற்றிய வரலாற்று சித்திரத்தை தருகிறது. அடுத்து நதி நீர் பங்கீட்டு மோதல் பற்றிய விபரங்கள் உள்ளன. தொடர்ந்து, தமிழக அணைக்கட்டுகள் பற்றி கட்டுரைகள் உள்ளன. அதில், வைகை அணை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. காவிரி நதியில் கட்டப்பட்டுள்ள அணைகள், தாமிரபரணி அணைக்கட்டுகள் என, தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களை பற்றி தருகிறது.
இந்தியாவில் நீர் மேலாண்மையில் உள்ள சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது. நீர் பயன்பாட்டின் சாதக அம்சங்கள் பற்றிய பொது அறிவை வளர்க்கும் வகையில் அமைந்துள்ள நுால்.
– மதி