வேறு வேறு வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு, ஆறுமுகக் கடவுள் எழுத்து மூலம் தந்த தீர்வுகளையும், அது தொடர்பான அனுபவங்களை தொகுத்துள்ள நுால். மூளை வளர்ச்சி பெறாத குழந்தைக்கு முருகனிடம் பரிகாரம் கேட்டபோது, ‘விதி முடிந்து விடும்; அடுத்த குழந்தை ஆயுள், ஆரோக்கியம் பெறும்’ என்ற பதில் தந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி ஊனமுற்ற பிள்ளை இறந்த அதே நேரத்தில், ஞானமுள்ள பிள்ளை பிறந்தது என அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது. முருக கடவுள் எழுதிக்காட்டிய அற்புத அனுபவங்களை தொகுத்து தரும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்