இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழில் விளக்கமாக தரும் நுால். ஒரு நாட்டின் குடியுரிமை என்பது மூதாதையர் வழியாகவோ அல்லது வேறு காரணங்களாலோ கிடைக்கும். குடியுரிமை பெற்றவர் அந்த நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்து நன்மைகளைப் பெறுவர்.
கடும் வறட்சி, போர்ச் சூழல் உள்ள நாட்டில் அமைதியின்மை போன்ற காரணங்களால் குடி பெயர்ந்து வேறு நாட்டிற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால், ‘அகதி’ என்ற நிலைமை ஏற்படுகிறது. ஒரு நாட்டில் குடியுரிமை இல்லாமல் முழு உரிமை பெற முடியாது.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றது. இந்த திருத்தச் சட்டத்தில் உள்ள விபரங்களை எளிய தமிழில் எடுத்துக் கூறும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்