வாழ்க்கையின் புரிதலுக்கு விடை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்கள், குணங்களை படம் பிடித்துக் காட்டுகிறது.
வாழ்ந்து கெட்ட வாழ்க்கை, வாழப்போகும் லட்சிய வாழ்க்கை, வறுமையிலும் வாழும் தற்காலிக வாழ்க்கை போன்றவற்றின் அர்த்தத்தை உணர வைக்கிறது. பிரச்னைகளை களைய, சிந்தித்து முடிவெடுக்க நேரமில்லாமல் தவிக்கும் அறியாமையை உணர்த்துகிறது.
பெண் மனதை ஆதி முதல் அந்தம் வரை கவிதையாய் சொன்ன விதம் சிந்திக்க துாண்டுகிறது. மகளின் மனதை அறியாமல், மண மேடையில் அமர வைத்த பெற்றோரை சாடும், ‘அருந்ததியும் அருந்ததி மனமும்’ கவிதை மனதை ஈரமாக்குகிறது. கவிதை, கதை எழுத துடிப்போர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்