சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் 28 தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. ரத்த பரிசோதனை மையத்தின் மனிதாபிமானமற்ற செயலை, ‘சரி செய்ய வேண்டும்’ என்ற கதை சாடுகிறது.
பிறர் உணர்வுகளை உணராமல், அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகி எடுக்கும் முடிவு; கடமை தவறும் காவலாளி குறித்த, ‘இப்படித்தானா நடக்குது’ கதை மனித மனங்களை காட்டுகிறது. புகுந்த வீட்டில் மகளுக்கு நடந்த கசப்பான அனுபவம், அதை தந்தை கையாண்ட விதம் குறித்த, ‘வக்கீல் மகள்’ கதை, குடும்ப வாழ்க்கைக்கு ஆயுள் கொடுத்துள்ளது.
முதல் ஆளாக ஓட்டு போடச் சென்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் திரும்பிய முதியவரின் ஏமாற்றம் குறித்த, ‘மாண்புமிகு வாக்காளர்’ கதை, அரசு நிர்வாகத்தை கேள்வி கேட்கத் துாண்டுகிறது. இப்படி, ஒவ்வொரு கதையும் மனித குணங்கள், நிலைப்பாடுகள், காதல், போராட்ட வாழ்க்கை, வயோதிகம், இல்லறம், நட்பு குறித்து பேசுகிறது. கதை, நாவல் எழுத துடிப்போர் வாசிக்க வேண்டி நுால்.
– டி.எஸ்.ராயன்