சமயோசிதமும், சாதுர்யமும், நகைச்சுவையும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சந்தர்ப்பம், சூழ்நிலைக்கு ஏற்ப சாதிக்கும் விவேகத்தை, சிறுவர்கள் மட்டுமல்ல முதியவர்களும் படித்து புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
மொத்தம் 48 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தெனாலிராமன் நல்ல படிப்பினைகளை தருகிறார். ரோஜா மலரைக் கொய்த போது பிடிபடுகிறான் தெனாலிராமனின் மகன். அவனைத் தப்பிக்க வைக்க தெனாலிராமன் உரக்க, ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சொல்கிறான். புரிந்து கொண்ட மகன், ரோஜா பூவை தின்று விடுகிறான்; திருட்டுப் பட்டம் தவிர்க்கப்படுகிறது.
இதுபோல் சுவையான சம்பவங்களுடன் அழகான நடையில் படிக்க ஏற்ற புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்