சூரியன் முதலான ஒன்பது கிரகங்களும், இவற்றின் இடையிடையே சுற்றிச்சுழலும் 27 நட்சத்திரங்களும் மண்ணில் வாழும் மனிதர்களை இயக்குவதாக குறிப்பிடும் நுால்.
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது; மேஷம் முதலான பன்னிரு ராசிகளிலும் பன்னிரு மாதங்களில் சுழன்று வருகிறது. ஒருவரின் ராசிக்கு எத்தனையாவது இடத்தில் சூரியன் இருக்கிறது என்பதைப்பொறுத்து தான் நற்பலனும், தீய பலனும் கிடைக்கிறது.
எந்த லக்கனத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ஏற்படும், சந்திரனுக்கு தோஷம் எப்படி ஏற்படும், ஒவ்வொரு கிரகத்திற்கும் சார்புள்ள நட்சத்திரங்கள், பூஜை செய்வதற்கு வேண்டிய பொருட்கள், கிரக தோஷ பரிகார பூஜைகள் போன்ற செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.
ஆரூடம் கணித்துக் கூறும் ஜோதிடர்களுக்கு பயன்படும் நுால்.
– புலவர் சு.மதியழகன்