சிவில் நீதிமன்றத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக எழுதப்பட்டுள்ள அனுபவ நுால். காவல் நிலைய நடைமுறைகள் பற்றியும், நீதிமன்ற நடைமுறைகள் பற்றியும் விளக்குகிறது.
மின் கட்டணம், குடிநீர் வரி உயர்ந்தாலும் சாமானியனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் 2 ரூபாய் மட்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், ‘முட்டையை மீட்க நினைத்து, கோர்ட்டுக்கு போகிறவன், கோழியை இழப்பான்’ என யதார்த்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி, காவல் துறையில் புகார் செய்வது எப்படி, காவல் துறையில் விசாரணை எப்படி நடக்கிறது போன்ற நீதிமன்ற நடைமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கட்டணம் செலுத்த தேவையில்லை; அது ஒரு சேவையாக கருதப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடைமுறையை தெளிவு பெற வைக்கும் அற்புத நுால்.
– புலவர் சு.மதியழகன்