சிவ வழிபாடு முறைகளை, 49 பகுதிகளில் உரைநடையாக விவரிக்கும் நுால். சிவபெருமானுக்கு கோவில் எழுப்புவது, வழிபாடு செய்வதால் உண்டாகும் சிறப்புக்கு ஒப்பாகும். நுாறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்; சிவலிங்கத்தை உருவாக்கியவர் சிவலோகத்தில் இருப்பார் என்ற கருத்தை சொல்கிறது.
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவர், எட்டு தலைமுறைக்கு முன்னோர்களையும் சிவலோகம் அடையச் செய்வார். ஒருவரால் இயலாதது எனினும் பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று மனதில் நினைத்தாலே போதும். அவருக்கு மோட்சம் கிடைக்கும் போன்ற தத்துவங்களை உள்ளடக்கிய நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்