சாதாரண குடும்பத்தில் சவால்களை சமாளிக்கும் வகையில் அமைந்த வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்துள்ள நுால். மறைந்த எழுத்தாளர் தமிழ்வாணன் நினைவில், ‘துணிவே என் துணை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, நெற்குப்பை கிராமத்தில் பிறந்ததில் இருந்து துவங்குகிறது. குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது, கழிப்பறை பயன்படுத்தியதில் சிரமம், கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வம் பற்றி எல்லாம் பேசப்பட்டுள்ளது.
வீட்டில், ‘பாக்கெட் மணி’ கிடைக்காததால், பழைய செய்தித்தாளில், ‘கவர்’ செய்து விற்று பணம் சம்பாதித்த சுவையான செய்தியும் பகிரப்பட்டுள்ளது. பிறகு, ‘அட்வர்டைசிங்’ பணி, கோல்கட்டாவில் தங்கியிருந்த போது ஏற்பட்ட அனுபவம், வாழ்க்கையில் முன்னேறியது எப்படி போன்ற தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.
பிறப்பு முதல் வாழ்க்கையை சுவைபடவும், ஒளிவு மறைவின்றியும் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால்.
– முகில் குமரன்