இளைஞர்கள் மனவளக்கலையை புரிந்து கொள்ளும் வகையில், 10 பாகங்களாக எழுதப்பட்டுள்ள நுால். வேதாத்திரி மகரிஷியின் யோகக் கலை சார்ந்தது. யோகாவைப் பற்றி தெளிவாகவும், புரிந்து கொள்ளும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. உடல் நலம், மன நலம், ஆன்மிக நலம், அக, புற ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தரவல்லது யோகா என்பதை புரிய வைக்கிறது.
கேள்வி – பதில் பாணியில் விளக்குகிறது.
கேள்வி: யோகா ஆரோக்கியத்திற்கு எந்த அளவு பங்கு வகிக்கிறது...
பதில்: மன அதிர்வுகளை குறைக்கும். மனதிற்கு தெம்பும், வளைந்து கொடுக்கும் தன்மையை தரும். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு தரும். முதுமையின் தளர்வை குறைக்கும். சக்தியைக் கூட்டி எடையை குறைக்கும்.
இது மாதிரி பலதரப்பட்ட விளக்கங்கள் உள்ளன. அவசியம் படித்து உணர வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்