குழந்தை பாடல்கள், 35 தலைப்புகள் கொண்டவை. அம்மா, தந்தை, சகோதர பாசத்தை பாடல் வரிகளால் மனதை தொடுகிறது. ‘காடை, குருவி, கவுதாரி, காகம், குயிலெல்லாம் இசை பாடி, வேடன் வந்தால் பறந்தோடி, விவரத்தோடு வாழுது...’ என்ற பாடல், பறவைகள் வாழ்வியலை சொல்கிறது.
காவிரி ஆற்றை கரை புரள பாடுகிறது. சோம்பல் இல்லா கடிகாரத்தை ஓட விடுகிறது. தமிழ் மாதத்தை மறதி இல்லாமல் பதிய வைக்கிறது. பூனையின் அன்பை கவனிக்க சொல்கிறது. வானொலியில் பாட வைக்கிறது. குழந்தைகளின் பண்பை அழகாய் வர்ணிக்கிறது.
ஏழ்மையை விரட்ட நேர்மை தேவை என்கிறது. இப்படி, ஒவ்வொரு பாடலும் அர்த்தம் கொண்டவை. குழந்தைகளுக்கு பாடல் கற்றுக் கொடுக்க உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்