மாணவர்களிடையே கலந்துரையாடிய மாமேதை அப்துல் கலாமின் கருத்துச் சிதறல்கள் பளிச்சிடும் நுால். மேற்கோள்கள் காட்டத் தக்கவையாக மிளிர்கின்றன. இந்திய ஜனாதிபதி மாளிகையில் வழக்கமாக நடைபெறும் இப்தார் விருந்தை, ஜனாதிபதியாக இருந்த போது அப்துல்கலாம் ரத்து செய்துவிட்டார். அதற்கான செலவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கச் செய்தார். மக்களின் மனம் ஒன்றுபட புனித மாதம் வழிவகுக்கட்டும் என்றார்.
‘வீடுகளுக்கு செய்தித்தாள்களை கொண்டு செல்லும் முன் செய்திகளைப் படித்து விடுவேன்’ என்று சொன்னது, மாமேதை கலாமின் அறிவாற்றலுக்கு அடித்தளம். தோல்வியை காணாமல் யாரும் வெற்றி பெற முடியாது. எங்கு படித்தாலும் நல்ல ஆசிரியர்கள் வேண்டும். அதுதான் முக்கியம். இது போன்ற கருத்துக்கள் நுாலுக்கு அடிநாதமாக உள்ளன.
– சீத்தலைச் சாத்தன்