சைவ சமய குரவர்களாகிய நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பதிகம் பாடிய திருத்தலங்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்களும், திருத்தலங்களின் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ள நுால்.
பஞ்சபூத திருத்தல யாத்திரை மேற்கொள்வோர், சிதம்பரத்தில் துவங்கி காஞ்சியில் முடிப்பது உத்தமம் என்று அறிவுரைக்கிறது. வில்வ இலை அர்ச்சனையால் உண்டாகும் பயன்கள், திதிகளின் வழிபாடு, இறைவனின் மூன்று வடிவங்கள், சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆரண்யங்கள், வீடு பேறு அளிக்கும் திருத்தலங்கள், பிரதோஷ வழிபாட்டின் பயன்கள் பற்றி கூறுகிறது. அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் செறிந்த நுால்.
– புலவர் சு.மதியழகன்