சீன மருத்துவம், சித்த மருத்துவத்தின் கிளையே என விளக்கும் நுால். சித்தர் குருவாக காலங்கிநாதரை போகர் குறிப்பிடுவதாக தெரிவிக்கிறது. இவர், கன்பூசியஸ் அல்ல என்றும் குறிப்பிடுகிறது.
சீன நாட்டினருக்கு கலைகள் பலவற்றையும், சித்த மருத்துவத்தையும் போன்ற கற்றுத் தந்ததாக குறிப்பிடுகிறது. காகிதம், கண்ணாடி, பீங்கான், மரக்கலங்கள், ஆகாயக் கூண்டு, தொலைநோக்கி, ஆகாயக் கூடை, காற்றாடி, நீருக்குள் மூச்சு விடும் கருவி, பறக்கும் ஒளி கூண்டு போன்றவற்றை அறிமுகப்படுத்தியதாகவும் சுட்டப்பட்டுள்ளது.
பல பாடல்கள் பிற்சேர்க்கையாக காணப்பட்டாலும், சீன – தமிழக தொடர்புகள் பற்றி தகவல்கள் கூறப்பட்டுள்ளன. சீனாவின், ‘யின் யங்’ குறியீடும், தமிழகத்தின் ‘சிவசக்தி’ குறியீடும் ஒத்துப் போவதாகவும் காட்டியுள்ளது. சீன – தமிழக தொடர்புகள் குறித்து ஆராய முயல்வோருக்கு உதவும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்