இந்தியாவுக்கு காந்தியை போல், ரஷ்யாவுக்கு டால்ஸ்டாய். கோடீஸ்வர வீட்டில் வளர்ந்து, பின் அனைத்தையும் துறந்து, மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவரை, குருவாக மதித்துள்ளார் காந்தி. அவர் எழுதிய நீதிக் கதைகளின் தொகுப்பு நுால்.
உழைப்பு, அன்பு, ஆதரவு, எளிமை, ஊக்கம், கருணையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நீதிக்கதைகள் புகழ் பெற்றவை. எழுபது ஆண்டுகள் பாவம் செய்து, மரணத்தின் விளிம்பில் சென்ற மனிதரின் மன்னிப்பு குரலுக்கு, கடவுள் செவி சாய்த்தாரா என்பதை, ‘பாவ மன்னிப்பு’ கதை பேசுகிறது.
உழைப்பின் வருவாயை ஆடம்பரமாக செலவிட்டால் ஏற்படும் விளைவுகளை, ‘ஏழையின் சுகம்’ கதை உணர்த்துகிறது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும், குழந்தையின் மனம், அன்பின் மகிமை, உழைப்பின் மகத்துவம், பேராசையால் ஏற்படும் வீழ்ச்சியை காண முடியும். மாணவ – மாணவியருக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்