மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் ஒரு கருத்து ஏற்படுவது இயல்பு; அது, படிப்பவர் மனதிற்கேற்ப மாறும். அவ்வாறு மாறுபட்ட சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ள நுால்.
மகாபாரத உதாரணமாக, தந்திரங்களால் மாந்தர்கள் பாண்டவர்களை வெல்ல கண்ணன் செய்தது சரியா என்ற கேள்விக்கு, ‘கவுரவர் தரப்பு சதி திட்டம், தந்திரங்களை அழித்து உலகில் தர்மம் தழைக்க, சில உபாயங்களை கடைப்பிடிக்க வேண்டி இருந்தது’ என்று கூறுவதாக உள்ளது.
ஐந்து பேருக்கு மனைவியாக நேர்ந்தது குறித்து திரவுபதி, ‘ஐந்து இந்திரர்கள் சாபம் நீங்க, சிவபெருமான் அருளால் யாகத் தீயில் பிறந்து பாண்டவர்களை மணந்தேன்’ என்கிறார். சகுனி தன் வன்மம் பற்றி, ‘என் சகோதரி காந்தாரியை பார்வை இழந்த திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து வைத்ததால், பீஷ்மரின் குரு வம்சத்தை அழிக்க கவுரவர் பக்கம் கோப உணர்வைத் துாண்டி, பாரதப் போருக்கு வழி வகுத்தேன்’ என்கிறார்.
–
இளங்கோவன்