கல்கி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் சுருக்க வடிவமாக அமைந்துள்ள நுால். நான்கு பாகங்களையும், 50 அத்தியாயங்களையும், 1,000த்துக்கும் மேற்பட்ட பக்கங்களையும் கொண்ட நாவலை, மூலத்தின் சுவை குன்றாமல் விறுவிறுப்புடன் சுருக்கி அமைக்கப்பட்டுள்ளது.
ஆயனச் சிற்பியின் மாமல்லபுரச் சிற்பங்கள், சித்தர் மலை ஓவியங்களின் சிறப்பு, சிவகாமியின் நடனம் போன்றவை மிகச் சுருக்கமாக சுட்டப்பட்டுள்ளன. பல்லவ நாட்டின் பெருமைகள், மகேந்திர வர்மனின் ஆளுமை, நரசிம்ம வர்மனுடைய வீரம், நரசிம்ம வர்மனும் சிவகாமியும் கொண்ட காதல், காதல் விலகிப் போகும் தருணம் என சுவைபட உள்ளது.
தமிழ் மண்ணின் வீரத்தையும், கலை பண்பாட்டுப் பெருமைகளையும் பேசும் ஒப்பற்ற புதினம். அணிகலன்கள், ஒப்பனைகள் இன்றி மூலவரை தரிசித்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது.
–
புலவர் சு.மதியழகன்