முகப்பு » வரலாறு » களிப்பு – கலக்கம் –

களிப்பு – கலக்கம் – கம்போடியா

விலைரூ.150

ஆசிரியர் : ஜி.எஸ்.எஸ்.,

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
முன்னுரையே இது எந்த வகையான புத்தகம் என்பதை விளக்கி விடுகிறது. அதுமட்டுமல்ல புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்கிற ஆவலையும் துாண்டி விடுகிறது. பயண நுாலாய் ஆரம்பித்து, வரலாற்று சரித்திரத்தை காட்டி நிறைவு செய்தது சிறப்பு.

ஆன்மிகம் என்றால் கோவில் கோவிலாக சென்று, அங்குள்ள இறைவனின் சிறப்புகளை சொல்வது தான் என்கிற மாதிரி கம்போடியாவில் இல்லை. அங்கோர்வாட் ஹிந்து கோவிலில் நாம் பார்க்கும் சுவாமி சிலைகள் வித்தியாசமான அனுபவம் தரும்.

இறப்பு, இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வந்ததின் விளைவு, அங்குள்ளோர் முகங்களில் காணப்படும் மென்மையான சோகம் என்பதை ஆசிரியரின் எழுத்து வாயிலாக அறிய முடிகிறது. கோவில்களின் சிறப்பை அழகாக விவரித்து கொண்டே செல்வதால், நாமும் அங்கு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

புகைப்படங்களும் நம்மை கம்போடியாவுக்கு வந்து பாருங்களேன் என்று கூறுகிறது. எழுத்துக்கு சாட்சியம் கூறும் புகைப்படங்களுடன் நிறைவான பயணக் கட்டுரை படித்த உணர்வு ஏற்படுகிறது. இதுவும் ஒரு வகையில் ஆன்மிக பயணம் தான்.

எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us