தமிழ் வழி படிக்கும் மாணவர்கள் மிகச் சுலபமாக ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டால் அது அஸ்திவாரமாக கல்லுாரிப் படிப்பு கட்டடத்திற்கு வலு சேர்க்கும்.
தன்னிலை, முன்னிலை, படர்க்கை என பாடம் சொல்லி இருப்பதும், உச்சரிப்பு ஒரே மாதிரி இருந்தாலும் எழுத்துக்களும், அர்த்தங்களும் மாறுபட்டு வருவதை சுட்டிக்காட்டி இருப்பதும் அருமையாக உள்ளன.
பெர்த் என்ற உச்சரிப்பு, இரண்டு சொற்களுக்கு வரும். ஒன்று பிறப்பை சொல்கிறது; அடுத்தது ரயிலில் துாங்கும் பகுதியை சொல்கிறது. பிரைஸ் என்ற உச்சரிப்பு, இரண்டாக வரும். ஒன்றின் அர்த்தம் விலை; மற்றதன் பொருள் பரிசு. இது மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகள். வளரும் பருவத்தில் பதியும் விதத்தில் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
அமைதியான பதில் கோபத்தை விரட்டும் என்பது போன்ற பழமொழிகளின் ஆங்கில தொகுப்பு, பொறுமையை திறமையை எடுத்துக்காட்டுகிறது. தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கான கையேடு.
–
சீத்தலைச் சாத்தன்