கம்ப ராமாயணத்தில் உள்ள நிர்வாகக் கோட்பாடு மற்றும் உத்திகள் பற்றி ஆராய்ந்துள்ள நுால். மேலாண்மையில் திட்டமிடுதல் முதல், செயல் வடிவில் வெற்றிக் கனிகளை பகிர்ந்து அளித்தல் வரை 10 நிலைகள் உள்ளன. இதை, ராவணனின் 10 தலைகளுடன் ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. ராவணனின் 10 தலைகளும் தனித்தனி பணிகளை கவனித்ததை, கம்பரின் பாடல் வழிநின்று மேலாண்மையுடன் விளக்கியுள்ளது.
மேலாண்மை திறன்களோடு, கம்பராமாயண கதாபாத்திரங்கள் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. எடுத்துக் கூறும் திறனுக்கு அனுமனையும், எளிமைக்கு குகனையும், பகிர்ந்தளிக்கும் தன்மைக்கு ராமனையும், கண்மூடித்தனமான முடிவிற்கு ராவணனையும் ஒப்பிட்டுள்ளது. ராமாயண கதாபாத்திரங்களில் மேலாண்மை கருத்துகளை பொருத்தி நிறுவப்பட்டுள்ள நுால்.
–
முகில்குமரன்