எழுத்து உலகில் கொடிகட்டிப் பறந்த ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாற்று நுால். தாயைக் குருவாகக் கொண்ட ஜெயகாந்தனுக்குப் பள்ளிப் படிப்பில் திருப்தி ஏற்படவில்லை. ‘பாஸ், பெயில்’ என்பதை அந்தக்காலத்தில் அடுத்த கிளாசுக்குத் துாக்கிப் போடுவது என பயன்பாட்டில் இருந்ததை, ஜெயகாந்தன் வாழ்வில் தோல்வி அனுபவத்துடன் வித்தியாசமாக விளக்கியிருப்பது புதுமாதிரியாக உள்ளது.
பொதுவுடைமை கட்சியில் பணியாற்றிய அனுபவம் அவரை எழுத்துலகத்திற்கு அழைத்து வந்தது. சரஸ்வதி மற்றும் சில பத்திரிகைகளில் எழுதியது பற்றிய குறிப்புகள் விரிவாக உள்ளன. எண்ணத்தில் சுதந்திரப் போக்கிற்கு இடையூறு இல்லை என்றால் மட்டுமே எழுதுவேன் என்று வரையறை போட்டு எழுத்துலகில் மிளிர்ந்த ஜெயகாந்தன் வாழ்க்கை, 21 அத்தியாயங்களில் வடிக்கப்பட்டுள்ளது.
–
மலர்