சாமானிய மனிதர்கள் குறித்தும், இலக்கியவாதிகள், இசை கலைஞர்களின் படைப்புகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 28 தலைப்புகளில் உள்ளன. பல கட்டுரைகளில், திருநெல்வேலி மாவட்ட வட்டார வழக்கு சொற்களை அறிய முடிகிறது. விருந்தோம்பலை, ‘நாக்கு’ என்ற தலைப்பு சுவையாக பகிர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஊரின் மகத்துவத்தை, ‘காந்திமதியின் தாயார்’ என்ற தலைப்பு, படம் பிடித்து மனதில் பதிய வைக்கிறது.
இலக்கியவாதிகளின் படைப்பு தாக்கத்தை, ‘மூத்தோர்’ என்ற தலைப்பு பந்தி போட்டு பரிமாறுகிறது. தமிழ் திரையுலகில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள் குறித்து, ‘ராமநாதன் முதல் ரஹ்மான் வரை’ கட்டுரை ராகங்களை காற்றில் பறக்க விடுகிறது. இசையமைப்பாளர்களின் திறனை அறிய விரும்புவோருக்கு பயன்படும் நுால்.
– டி.எஸ்.ராயன்