அவய சாஸ்திரம் பற்றி கூறும் நூல். கைரேகையின் பலன்களை கூறுகிறது. உடல் உறுப்புகளின் அமைப்பும், அதனால் விளையும் நன்மைகளையும் தருகிறது.
கால் சுண்டு விரல் நிறம் அமைப்பு குறித்து விளக்குகிறது.தலைமுடியின் அமைப்பு அதன் நன்மை, தீமை விளக்கி கூறப்பட்டுள்ளது. மனித உடலில் அடி முதல் முடி வரை அங்க அமைப்பை விளக்கியுள்ளது.
ஆண், பெண் பாலருக்கு அமைந்த ரேகையின் பொதுப்பலன் கூறப்பட்டுள்ளது. புருஷ சாமுத்ரிகா லட்சணமும், ஸ்திரீ சாமுத்திரிகா லட்சணமும் தனித்தனியே தரப்பட்டுள்ளன.
இந்த நூல், 1920க்கு பின், முதன்முறையாக அச்சுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரேகை ஜோசியத்தில் ஆர்வமுள்ளோருக்கு உதவும் நூல்.
–
புலவர் இரா. நாராயணன்