பல்சுவை பாடல்களை எளிய வரிகளில் உள்ளார்ந்த கருத்து நயத்துடன் படைத்துள்ள நுால். மாமனிதர் அப்துல் கலாம் பற்றி, ‘அரிதினும் அரிது மானிடராய் பிறப்பது அரிது; அறிவியல் மேதையாய் பிறப்பது அதனினும் அரிது, அறிவியல் மேதையாய் பிறந்து மிளிர்ந்தாலும், அரியணையில் புதுமையாய் அமர்வது மாபெரும் அரிது!’ என பாடுகிறது.
உள்ளத்தால் உயர்ந்த இரண்டு பெண்களைப் பற்றி, வேலைக்காரி என்ற தலைப்பில் எழுதியுள்ளார். வீட்டுக்கு வந்த வேலைக்காரி பண்பான நடத்தையால் எல்லாருக்கும் பிடித்தவரானது பற்றி மனிதநேயம் பாடுகிறார்.
அகத்தில் நின்றாள் என்ற தலைப்பில் கீரை விற்கும் பெண்ணை பற்றி பாடுகிறார் மற்ற கீரைகளை காசுக்கு கொடுப்பார். ஆனால், வீட்டில் விளைந்த அகத்திக் கீரையை வைத்திய கீரை என்று இலவசமாக கொடுப்பார் என பாடியுள்ளார். மனதில் தைக்கும் பாடல் வரிகளை கொண்ட நுால்.
–
சீத்தலைச் சாத்தன்