தமிழக நாட்டுப்புற செயல்பாட்டில் அறிவியல் உண்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் நுால். மரபு வழியில் உள்ள அறிவியல் உண்மைகளை தெரிவிக்கிறது. தமிழகத்தில் தொன்றுதொட்டு வழங்கி வரும் மரபு, வழிபாடு மற்றும் நம்பிக்கைகளில் அறிவியல் உண்மைகள் இருப்பதை அலசி ஆராய்கிறது. அது குறித்த உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இயற்கையுடன் உறவாடும் மக்கள், சூழலுக்கு ஏற்ப அதை பயன்படுத்திக் கொண்டது பற்றி விவரிக்கிறது.
பாடல்களில், விடுகதைகளில், சொலவடைகளில் அறிவியல் சார்ந்த செயல்பாடுகள் மரபு வழியாக கடத்தி, தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது குறித்தும் உரைக்கிறது. குடும்பப் பழக்கவழக்கங்களில், அறிவியல் சிந்தனை ஊடாடியுள்ளதை கண்டுபிடித்து சொல்கிறது. தமிழர் வாழ்க்கை முறையில் இருந்த அறிவியல் உண்மைகளை எடுத்துக்கூறும் ஆய்வு நுால்.
– ஒளி