மாணவ – மாணவியரின் மனநலத்தை மேம்படுத்த உதவும் நுால். ஒன்பது தலைப்புகளின் படைப்பு. பதின்பருவ காலத்தில் மாணவர்களிடம் மேலோங்கும் எண்ணங்கள், சமூக தாக்கம், தீய பழக்கம், பாலியல் வன்முறை, கூடாநட்பு, போதைப் பழக்கங்களால் ஏற்படும் அவலங்களை ஆழமாக அலசுகிறது.
மாணவர்களின் லட்சியம் என்னவாக இருக்க வேண்டும்? பெற்றோர், பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு எப்படி பழகுவது? எந்த சூழலில், அன்பாக கண்டிக்க வேண்டும் என கூறுகிறது.
ஆசிரியர்களின் அணுகுமுறை என்ன?
கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் மனநலத்தை அறிந்து திட்டங்கள் வகுப்பது போன்ற செயல்களை பேசுகிறது. பள்ளிகளில் மனநலத்திட்டம், மனநல புகார் பெட்டி ஏன் அவசியம்? அவர்கள் நலனில் சமூகம் மற்றும் அரசின் பங்கு என்ன? திரைப்படங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம், மாணவ மனநலத்தை ஊடகவியலாளர்கள் எப்படி அணுகுவது என விரிவாக அலசுகிறது. பெற்றோர், ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
–
டி.எஸ்.ராயன்