கீதா உபதேசம் மேற்கோள்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். ஸ்லோகங்களுக்கும் எளிய நடையில் பொருள் கூறப்பட்டிருப்பதோடு, மகாபாரத, புராண நிகழ்வுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. எவன், யார் மனதையும் புண்படுத்தாது, இறை சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ அவனே இறைவனுக்கு உகந்தவன்; இறைவா என்று கூப்பிட்டதும் மகனே என்று கேட்கின்ற தன்மையை பெற்றிருப்பன் இறைவனுக்கு உகந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பகவான் அருளுரைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. யார் எங்ஙனம் வேண்டுகிறார்களோ அங்ஙனமே சார்ந்து இருக்கிறேன்; பற்றற்ற நிலையிலே சுகமும், ஆனந்தமும், திருப்தியும் உண்டு; ஒன்றைப் பற்றி சுகம் அடைவதை விட, பற்றற்ற நிலையில் சுகம் அடைவதே உத்தமம் என விவரித்துள்ளது. பகவத் கீதையின் சாராம்சத்தைத் தெரிந்து, வாழ்வில் பயன்படுத்த உதவும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்