சர்க்கரை வியாதியும் அதை பற்றிய விளக்கத்தையும் மருந்துகளாலும் இன்சுலின் ஊசிகளாலும் வாய்வழி மாத்திரைகளாலும் அதைக் கட்டுப்படுத்தி காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எழுதியுள்ள இந்த புத்தகம், சர்க்கரை நோயாளி, மருத்துவ மாணவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ களப்பணியாளர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் உள்ளது.
இன்சுலின் வகைகள், எப்போது இன்சுலின் பரிந்துரை செய்ய வேண்டும், இன்சுலின் அளவை எப்படி தீர்மானிப்பது, இரவு இன்சுலின் ஊசி யாருக்கு கொடுக்க வேண்டும், இன்சுலின் சிகிச்சையில் எதிர்காலம் என்ன போன்ற விபரங்கள் உள்ளன.
பேக்கரி உணவுகளால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இருதயம், சிறுநீரகம், கண், பாதங்கள், உடல் எடை போன்றவற்றை, பாதிப்பில்லாமல் பாதுகாப்பது எப்படி என்று விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
–
இளங்கோவன்