நீலகிரி மாவட்ட சிறப்பம்சங்களை தெரிவிக்கும் நுால். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை, அக்கறையை, விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
ஒருபுறம் சுற்றுலா தலங்களைப் பற்றி எளிமையான ஆர்வமூட்டும் அறிமுகம். மறுபுறம் வரலாற்று நிகழ்வுகள் சூழலியல் சார்ந்த அக்கறை குளிர் பிரதேச பூர்வகுடிகளைப் பற்றிய சமூகப் பண்பாட்டு அணுகுமுறைகள், கலைகள், தொல்லியல் தகவல்கள், அரசியல் தலைவர்களின் வருகைக்கான பின்னணி, சினிமா படப்படிப்புகள் பற்றிய சுவாரசியமான செய்திகள் ஆவணப்படமாக கண் முன் விரிகிறது.
பூச்சிகளை உண்ணும் தாவரம், தங்கத்தை உருக்கும் அதிசயம், நீலமலை பெயருக்கான காரணம், வரலாற்றை பறை சாற்றும் கற்கால பாறை ஓவியங்கள், கோத்தர் மக்களின் உடை, மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்ட குரும்பர், பனியர் பழங்குடிகளின் திருவிழா, தோடர் போர்வைக்கு புவியியல் குறியீடு என பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. ஊட்டி தொடர்பான ஒரு தகவல் களஞ்சியம்.
–
இளங்கோவன்