குருக்ஷேத்ரம் என்றதும் மனக்கண் முன் முதலில் வருவது நீதிக்கும், அநீதிக்கும் இடையேயான போர்; அடுத்தது பலனை எதிர்பார்க்காதே; கடமையைச் செய் என்ற கண்ணனின் அறிவுரை. இந்த நுாலில் மகாபாரதத்தின் சாரத்தை, கூறப்பட்டுள்ள வரலாற்றுக் கதைகளை, குருக்ஷேத்ரம் தொடர்பான தகவல்களை எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது.
படித்ததும் குருக்ஷேத்ரத்திற்குச் செல்ல வேண்டும்; புனிதர்கள் பலர் ஒன்று கூடிய அந்த தலத்தை தரிசிக்க வேண்டும்; அந்த புண்ணிய ஆத்மாக்கள் உலாவிய இடங்களில் சஞ்சரிக்க வேண்டும்; அவர்களின் மூச்சுக் காற்று பரவி இருக்கும் இடங்களுக்குச் சென்று சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெருக்கெடுக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் இது வெறுமனே ஒரு பயணக் கட்டுரை அல்ல; அனைவரின் வாழ்வுக்கும் பயனுள்ள கட்டுரைத் தொகுப்பு.
–
இளங்கோவன்