தமிழ் மொழியும், சைவ நெறியும் கலந்த மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். காந்தியை, இவனோர் அரியவன் என விடுதலை பேச வைக்கிறது. காஞ்சி வரதர் வீதி உலாவை பேசி, அதனுடன் இழுத்து செல்கிறது.
இந்தியர்களுக்கு எல்லை இல்லாத தேடல் இருக்க வேண்டும் என்கிறது. தேச ஒற்றுமையை வலியுறுத்துகிறது. சுதந்திர போராட்ட பதிவுகளையும், ஜாதி, மதம் கடந்த சகோதரத்துவ தேவையையும் உணரச் சொல்கிறது.
தாய்மொழியாய் போற்றும் தமிழை புகழ்ந்தாலும், விழிப்படைய வேண்டிய அவசியத்தையும் கூறுகிறது. வானம், மழை, காடு என, இயற்கையை பாதுகாப்பதால் ஏற்படும் நன்மைகளை பரிமாறுகிறது.தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்