துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பற்றி புராண, இதிகாச, இலக்கிய, கல்வெட்டு மற்றும் செவி வழிச் செய்திகளை திரட்டி ஆய்வு செய்து உரைக்கும் நுால். கயத்தாறைச் சுற்றிஉள்ள ஊர்கள், தொண்டு நிறுவனங்கள், வழிபாட்டிடங்கள், கலை மற்றும் பண்பாடு, தொழில் வளம், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என பல செய்திகளுடன், வீரபாண்டிய கட்ட பொம்மனின் வரலாறையும் வடித்துள்ளார்.
குருதியைச் சூடேற்றும் வகையில் உணர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. கயத்தாறைச்சுற்றி கிடைத்த தொல்லியல் சான்றுகளை குறிப்பிடுகிறது. கயத்தாறிலுள்ள கோவில்களை தரிசிப்பது மட்டுமன்றி மக்கள், கலை, பண்பாடு, வரலாறு என பலவற்றையும் தரிசிக்க வைக்கும் நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்