தமிழகத்தில் கழுகுகளின் நிலை பற்றி ஆராய்ந்த போது பெற்ற அனுபவத்தை பகிரும் நுால். சாகசம் நிறைந்த பயணம் மற்றும் காட்டின் இயல்பான செயல்பாட்டை காட்டுகிறது. ழுகுகளின் பரவலை அறியும் வகையில் மேற்கொண்ட பயணத்தை ஒரு கதை போல் விவரிக்கிறது. காடு, மரங்கள், விலங்குகள் குறித்து ஆர்வமூட்டும் தகவல்களை கொண்டுள்ளது.
காட்டில் அயல் தாவரங்களின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது. காடுகளை நம்பி வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வுநிலையை பரிவுடன் பதிவு செய்கிறது. காடு பாதுகாப்பில் பழங்குடி மக்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. அவர்கள் பாரம்பரியமாக கொண்டுள்ள காட்டறிவை சிலாகித்து விவரிக்கிறது.
உயிரின பன்மைத்துவத்தில் மரங்கள், விலங்குகள், பறவைகளுடன் காலநிலை பற்றிய தொடர்பை சுட்டிக்காட்டுகிறது. எளிய நடையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. காடுகள் பற்றி தெளிவான பார்வையையும், முக்கியத்துவத்தையும் காட்டும் நுால்.
– அமுதன்