வரலாறை மையப்படுத்திய புதினம் மற்றும் சமூக நாவல் நுால். சேரமான் அவையில் நடனமாடச் சென்ற ராஜ நர்த்திகை வண்டார் காதலை வெளிப்படுத்தினாள். சினமுற்ற மன்னன், மூத்த அமைச்சருக்கு, அவளை ஆசைநாயகியாக்கினான்.
அவமானப்படுத்திய மன்னனை பழிவாங்கும் நோக்கில், தூதனை ஒற்றன் என பழி சுமத்தி, சிறைபடுத்த காரணமானாள். சோழ – சேர மன்னர்களுக்கிடையே சூழ்ச்சியால் பகை உண்டாக்கினாள். வரலாற்று நாவலுக்கே உரிய நடை கவருகிறது.