ஆதி, அந்தம் இல்லாத சிவன் பெருமை குறித்து சுவாரசியமாக விளக்கும் நுால். மனிதர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க துணைபுரிவதை பதிவு செய்துள்ளது.
சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்கவாசகரிடம் காட்டிய அன்பு, அருள், பொருள் அளித்தது குறித்து தேவாரப் பாடல்களில் உள்ள விபரங்களை காட்டுகிறது. மரணத்தின் மர்ம முடிச்சுகளை கடக்க புராணக் கதைகளை சான்றாக காட்டியுள்ளது.
பெண் சித்தர்கள் பற்றியும் விரிவாக பேசியுள்ளது. பகவத் கீதையில் பயனளிக்கும் சிந்தனைகளை பட்டியலிட்டுள்ளது. திருக்குறளும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கிலான ஆன்மிக கட்டுரை தொகுப்பு நுால்.
– முகில் குமரன்