கம்பரின் பாத்திரப்படைப்புகளில் ராமன், அங்கதன், குகன், அகலிகையின் உயர் பண்பு நலன்கள் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ள நுால். ராவணனிடம் மட்டுமல்ல கும்பகர்ணனிடமும் அறம் காட்டியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
ராமனின் இரக்கப் பண்பையும் விவரிக்கிறது. சிறியன சிந்தியான் என வாலியை மேலானவனாகக் கூறும் கம்பர், அங்கதனை தங்க மனம் கொண்டவனாக உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
கங்கை கரை வேடன் குகனை, காளத்தி வேடனோடு ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அகலிகையைக் கம்பர் போற்றுவதைச் சுட்டிக்காட்டுவதோடு புதுமைப்பித்தனின், சாப விமோசனம் சிறுகதையுடன் தொடர்பு படுத்துகிறது. ஆய்வாளர்களுக்கு பயனுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்