மகாபாரத கதையை புரியும் வகையில், 13 பருவங்களையும், 182 தலைப்புகளில் தந்துள்ள நுால். திருதராஷ்டிரன்-, பாண்டுவின் மூதாதையர் துவங்கி, காசியபர் -–- தாட்சாயணி, இவர்கள் மகன் மனு, மனுவின் மகள் இளை, அவளின் கணவன் புதன், இவர்களின் மகன் புரூரவன் என துரியோதனன் வரை பரம்பரை சொல்லப்பட்டுள்ளது.
விதுரன் முற்பிறப்பு, திருமணம், கர்ணன் பிறப்பு, குந்தி சுயம்வரம், துரோணர் சபதம், திரவுபதி திருமணம், பதவி போட்டி, சூதாட்டம், வனவாசம், தலைமறைவு வாழ்க்கை, குருஷேத்திரப் போர், பட்டாபிஷேகம், கிருஷ்ண அவதார முடிவு எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று புதினம் போல் அமைந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்