குருவை பீடித்த நோய்க்காக, தன்னை வருத்திய நாராயண பட்டத்திரி அந்த நோயை குணமாக்க குருவாயூரப்பனை வேண்டி, 1,034 ஸ்லோகங்கள் பாடிய போது சரியென்று தலையாட்டியதாக வரலாறு.
ஒவ்வொரு அவதாரமாக விவரித்து, முக்கிய நிகழ்வுகளை ஸ்லோகங்களாக சொல்லிச் சொல்லி சரிதானா நாராயணா... என்று கேட்பதும், நாராயணன் அதற்கு தலையாட்டி ஆமென்றதும் அதிசய நிகழ்வு தான்.
ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் எளிய தமிழில் உள்ளன. கண்ணா... கோகுலத்தில் இப்படி இருந்தாயே... பாண்டவருக்கு அருளினாயே... என் நோயை தீர்க்க மாட்டாயா என, பாடல்களின் முடிவில் தகப்பனிடம் மகன் உரிமையோடு கேட்பது போலிருக்கிறது.
--– எம்.எம்.ஜெ.,